Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

One Language-Many Nations.


One Language-Many Nations.

The Roots & Aerial Roots of Ethnic Tamils.
The Roots of the Tamil society take the researcher back to the prehistoric period.Tamil society,which at present flourish all over the World,constitute a population of 75 Million people.Two of its roots have set foot in India and Eelam,matured and are spreading their countless aerial roots all over the world.The population estimates of Tamils country by country is shown graphically elsewhere and also listed below :

ROOTS :

Tamil Nadu (India) - 55000000
Tamil Eelam (Sri Lanka) - 5000000

AERIAL ROOTS :

Other states (India) - 6090000
Karnataka - 2000000
Kerala - 1000000
Maharashtra - 1000000
Andhra - 800000
Pondicherry - 600000
Utarpradesh - 300000
West Bengal - 100000
Gujarat - 100000
Punjab - 100000
Other states - 50000
Andhaman - 40000

Malaysia - 1600000
Reunion - 350000
UK - 300000
South Africa - 300000
Burma - 250000
Singapore - 120000
Canada - 120000
France - 100000
Mauritius - 100000
Surinam - 100000
Australia - 75000
Saudi Arabia - 25000
Guyana - 10000
Fiji - 70000
Siselse  - 7540
Indonesia - 50000
USA - 40000
GERMANY - 40000
Kuwait - 10000
Emirates - 10000
Bahrain - 5000
New Zealand - 5000
Italy - 5000
Denmark - 5000
Oman - 5000
Jordan - 4000
Kadar - 3000
Norway - 3000
Sweden - 3000
Portugal - 2500
Thailand - 2000
Hong Kong - 2000
Philippines - 1000
Iraq - 1000
Gibuti - 1000
Spain - 1000

TOTAL - 69816040

(Source) - Researcher,Mr Alagappa Ramohan
தமிழ் மறை-திருக்குறள்,TIRUKKURAL,The Holy Scripture
தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு
THE HANDBOOK OF 
TAMIL CULTURE AND HERITAGE
தமிழின எதிர்கால வழிகாட்டி
GUIDE TO TAMILS FUTURE
Published : January 2000
(Sharing Purpose - Thanks A Million for the Hard work of the Author Mr Alagappa Ramohan) 

10வது உலக தமிழ் இணைய மாநாடு

10வது உலக தமிழ் இணைய மாநாடு வரும் ஜுன் மாதம் அமேரிக்காவில் நடைபெறவிருக்கிறது.

பென்சில்வேனியா பல்கலைக் கழகம்

17.06.2011 - 19.06.2011

மாநாட்டின் மையக்கருத்து :
"கணினியின் ஊடே செம்மொழி"

மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோர் :
www.tamilinternetconference.org  இணையதளத்திற்க்குச் சென்று கட்டுரை தலைப்புகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

கட்டுரை சுருக்கங்களை மின்னஞ்சல் வழி அடுத்தமாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பிவிட வேண்டும்.

நன்றி : (உத்தமம் அமைப்பு)

26/2/11,சனி மாநாட்டின் முதல் நாள்.....


சிங்கப்பூர் சங்கங்களான "திருவள்ளுவர் தமிழ்வளர்ச்சிக் கழகம்",தமிழ்வேல் நற்பணி மன்றம்","மக்கள் கவிஞர் மன்றம்","சிங்கப்பூர் தமிழர் சங்கம்","சைவ சித்தாந்த சங்கம்",மற்றும் "திருவள்ளுவர் பதிப்பகம்"(தமிழ் அமுதம் சஞ்சிகை) சேர்ந்து மலேசியா,"ஜோகூர் மாநிலத் தமிழர் சங்க"மும் சேர்ந்து நடத்திய தமிழ் இலக்கிய உறவு மாநாட்டு விழா 26/2/2011 மற்றும் 27/2/2011 தேதிகளில் லோட்டஸ் டெசாரு,கடற்கறை தங்குவிடுதி,கோத்தா திங்கி,ஜொகூரில் மிகவும் கோலகலமாக நடந்தது.

முதல் நாள்,மதியம் 3 மணிக்கு,மங்கள நாதஸ்வர இசையுடனும் பரதநாட்டியத்துடனும் ஆரம்பித்து, இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.சிங்கை பல்கலைக்கழகம்,பல துறை தொழில்நுட்பக்கல்லூரி,ஆசிரியர் பயிற்ச்சி நிலையம்,மற்றும் உயிர்நிலை பயிலும் மாணவர்களும் பெரிய அளவில் வந்திருப்பதை காண பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் சிங்கை மூத்த ஆசிரியர்களையும்,முனைவர்களையும் சந்தித்து உரையாடி பல செய்திகளை கேட்டு அறிந்ததில் எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது. 

முகநூலில் மட்டுமே இதுநாளில் நான் பார்த்து பழகிவந்த மலேசிய முகநூல் நண்பர்களை மாநாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி அளித்தது.மாநாட்டின் வாசலில் சங்க காலத்தை சித்திரிக்கும் வண்ணமிகு அழகு நிறைந்த கோலத்தை பார்த்தவுடன்,நாம் இப்போழுது சங்ககாலத்தில்தான் இருக்கின்றோமா என எண்ணவைத்தது.மாநாட்டுக்கென்று தயாரிக்கப்பட சிறப்பு பாடலை இசையமைத்தவர் சிங்கை  திரு குணசேகரன்.மாநாட்டு பாட்டை எழுதியவர் மாநாட்டின் செயலாளர் இரா.தமிழ்மணி.பாடலைப் பாடியவர்கள் தமிழக பின்னணிப் பாடகி சுருதி,திரு மணிமாரன்,திரு பரசுராமன்,திரு குணசேகரன்.பாடலும் இசையும் மிகவும் அருமையாக அவ்வப்போது அங்கங்களுக்கிடையே ஒளித்து எல்லோருடைய கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக படைக்கப்பட்டன.

முதல் அங்கமாக "வழிப்பயணக் கற்பிதங்கள்",படைத்தவர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.அவர் மலேசியப் படைப்பிலக்கியம் பற்றி அவை கடந்து வந்த பாதைகள்,துறைசார்ந்த படைப்புகள்,இப்படைப்புகளின் பலம்/பலவீனம் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்துறைத்தார்.

"வழிப்பயணக் கற்பிதங்கள்" இரண்டாவதாக பேசியவர் முனைவர் இரா.சிவகுமரன்.அவர் சிங்கப்பூர் படைப்பிலக்கியம் பற்றி அவை கடந்து வந்த பாதைகள்,துறைசார்ந்த படைப்புகள்,இப்படைப்புகளின் பலம்/பலவீனம் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்துறைத்தார்.குட்டி சிங்கப்பூரில் இத்தனை இலக்கிய விஷயங்களா என்னவைக்கிறது!

அடுத்து,இருநாட்டு மூத்த எழுத்தாளர்களின் பட்டறிவு."இலக்கிய வேள்வியா? அல்லது இதய வேதனையா?".எல்லோருக்கும்  மிகவும் பயனளித்தது.நல்ல பெரிய அனுபவமுள்ள பல உயர்தர பரிசுகளைப் பெற்ற சிங்கை மலேசிய படைப்பாளர்கள் தாங்கள் எவ்வாறு எழுத்து துறைக்கு வந்தார்கள் என்றும்,எப்படி தங்களுக்கு எழுத்தார்வம் வந்தது என்றும்,தங்கள் கடந்து வந்த அனுபவங்களை பற்றி இனிய தமிழில் நகைச்சுவையுடனும் நம்மை சிந்திக்கவைக்கும் படியாகவும், நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அப்பேச்சாளர்களுள் என்னைக் கவர்ந்தவர் சிங்கை திரு பொன் சுந்தரராசு என்பவர்.தமிழகத்திலிருந்து சிங்கைக்கு வந்து நல்ல பேரும் புகழும் வாங்கி சிங்கைக்கு பல நல்ல அறிய பல நூல்களையும் தமிழ் ஊடக துறையில் பணி புரிந்தும்,5 முறை நல்ல தமிழ் ஆசிரியர் விருதை வாங்கியிருக்கிறார்.தமிழுக்கும் தமிழ் எழுத்து துறைக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் நல்லதொரு சேவையை பார்த்து,அவரைப் போல் நாமும் வரமாட்டோமா என்று மனம் எண்ணுகிறது. மாநாட்டில் அடுத்தடுத்து வந்த அங்கங்களும் இரு நாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பலர் படைத்த படைப்புக்களை பல விஷ்யங்களை நமக்கு படம் பிடித்து காட்டின.

அடுத்து,"மின்னுலகில் தமிழ்ப் படைப்பிலக்கியம்".படைத்தவர்கள் திரு மா.நவின்,திரு கே.பாலமுருகன் மற்றும் திரு யுவராஜன்.இணையத்தில் வலைப்பதிவு தளங்கல் எவ்வாறு இயங்குகின்றன,எவ்வாறு இணையமூலம் இலக்கியங்களை மக்களிடம் சேர்க்கின்றன மற்றும் பல அரிய இணைய இலக்கிய செய்திகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்ச் சேவையார்ளைகளை சிறப்பித்து,ஒரு பாராட்டு விழா நடந்தேறியது.

மலேசியாவில் தமிழர்களுக்கு பல தொண்டுகள் புரிந்து மலேசிய தமிழர்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த "இலக்கிய குறிசில்","அகிலன்" 60 வருடங்களாக இலக்கியத்திற்க்காக சேவை செய்து,பட்டங்களும் பல விருதுகளும் பெற்ற மூத்த அறிஞர் திரு ராமையா அவர்களுக்கு நாதஸ்வர இசை முழங்க மலர்க் கிரீடம் சூட்டி,பொன்னாடை போர்த்தி,பூமாலை அணிவித்து  கொளரவித்தார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது,அரங்கில் இருந்த எல்லோருக்கும்.

இரவு உணவை சுவைத்துக்கொண்டே இசையமைப்பாளர் திரு குணசேகரன்,மற்றும் மலேசிய இசைக் கலைஞ்சர்களின் இன்னிசையுடன் 1970தில் வந்த புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடி எல்லோருடைய மனதையும் கவர்ந்தனர். மாநாட்டின் முதல் நாள் இனிதே முடிந்தது என்று நினைத்தேன்..........ஆனால் எங்களுக்கு இரவு தங்கும் அறையிலோ ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிங்கை ஏற்பாட்டு குழுவினர்க்கும் ஒரு பெரிய கலந்துரையாடலே நடைபெற்றது. அனைவரும் அசதியில்லாமல் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டோம்.

"தந்தை பெரியார்","இந்திய இலங்கை தமிழின் நிலை" பற்றியும் அறிவைத் தூண்டும் விடுகதைகள் பற்றியும் உரையாடி மகிழ்ந்தோம்.இனி எப்போழுது இப்படி நாம் எல்லோரும் ஒன்றாக கூடபோகிறோம்? இப்படி உல்லாசமாக இரவு 11 மணிக்கு ஆரம்பித்த "நமக்குள்ளான" இன்ப அறிவூட்டும் கலந்துறையாடல் இரவு 12.30க்கு முடிந்தது. 

இப்போழுது விடியற்காலை மணி 5,எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை! காலை 7.30 மணிக்கு காலை சிற்றுண்டி முடிந்தபின் 2ஆம் நாள் மாநாடு துவங்கிவிடும்.நிறைய படங்கள் எடுத்துள்ளேன்,அவற்றையெல்லாம் திங்கட்கிழமை மேலிறக்கம் செய்கிறேன்.
ஒரு கனம் யோசித்து பார்க்கிறேன்,எவ்வளவு கடும் உழைப்பு போட்டிருக்க வேண்டும் இரு நாட்டு தமிழ் அமைப்புகளும்,அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.
வாழ்க வளர்க தமிழ்! 

வணக்கம்.

27/2/11,ஞாயிறு மாநாட்டின் இரண்டாம் நாள்.....

காலை கூட்டம் அதிகமாகவே இருந்தது,ஞாயிற்றுக்கிழமையானதால்.பலர் தங்கள் குடும்பங்களுடன் மாநாட்டிற்க்கு தங்கள் பிள்ளைகளுடன் வந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.வாழை மரம்,தோரணங்கள்,அழகு தமிழ் சிற்ப்பங்கள் நம்மை எல்லோறையும் வாங்க வாங்க என்று அழைப்பதுபோல் எனக்குள் ஒரு உணர்வு.

காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு,அறிஞர்கள் கூடும் மண்டபத்திற்க்கு சென்றேன்.அங்கே பல மலேசிய தமிழ் ஆர்வலர்களை சந்தித்து அவர்களுக்கு பிடித்த இலக்கிய புத்தகங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.மலேசிய அன்பர்கள் எங்கள் சிங்கப்பூர் குழுவினர்களுடன் அன்போடும் பாசத்தோடும் நலம் விசாரித்து பழகுவதை பார்த்தேன்,வெவ்வேறு நாட்டு மக்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் "தமிழ் தாய்" மக்கள் அல்லவா?

காலையில் சிறப்பு சொற்பொழிவுகள் பல நடந்தன.பட்டிமண்றம் போல் இரு நாட்டினறையும் பிரித்து ஒரு கருத்தை பற்றி விவாதிக்க வேண்டும்.

"மலேசியா சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள்"-அங்கத்தின் கரு.

மலேசியா பேச்சாளர்கள்: திரு சை.பீர் முகம்மது,டாக்டர் ஜி.ஜான்சன்,திருமதி நிர்மலா இராகவன்
சிங்கப்பூர் பேச்சாளர்கள்: முனைவர் சீதா இலட்சுமி,திருமதி மீனாட்சி சபாபதி,திருமதி உஷா
அறிமுகம்/தலமையாற்றியவர்: இணைப்பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன்.

இவர்கள் அனைவரும் ஆற்றிய உரையை இரவுவறை கேட்டுக்கொண்டிருக்கலாம் போல இருந்தது,அவ்வளவு சுவாரிசியமாகவும் பல அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்தார்கள்.பேச்சாளர்கள் அனைவரும் 2 மணி நேரத்தில் ஒரு பட்டரையே நடத்திவிட்டார்கள்.

திரு சை.பீர் முகம்மது அவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து பலரையும் சிந்திக்க வைத்தார்.மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் உள்ள வேறுபாடுகளை பற்றி அவர் சுவையாக அமைதியாக கூறினார்."பக்தி இலக்கியம்" பற்றியும் அவர் கருத்துறைத்தார்.இலக்கியத்தை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பதில்லை,பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்திலே இருந்து சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றார். அவர்  சிங்கப்பூர் திரு சே வே சண்முகம் பற்றி புகழ்ந்து,தனது குரு என்று சொல்லி புகழ்ந்து பேசினார்.தன் மலேசியாவில் இருந்து 100 கதை புத்தகங்களை தமிழகத்துக்கு தந்து மலேசியாவிலும் நல்ல கதை இலக்கனம் ஆர்வாலர்கள் இருக்கிறார்கள் என்று மாநாட்டில் பேசினார்,இப்போழுது மலேசியா தமிழ் சமுதாய நூல்கள் உலகெங்கும் உள்ள நூலகங்களில்,தமிழக பல்கலைக்கழகங்களில் இருக்கின்றன என்று சொன்னவுடன் பலத்த கைதட்டல் பார்வையாளர்களிடமிருந்து.

மற்ற பேச்சாளர்களும் மிக அருமையாக பேசி அனைவறையும் கவர்ந்தார்கள்.உண்மையிலேயே நான் மிகவும் பெருமை அடைகிறேன்,இம்மாநாட்டிற்க்கு  வந்து,மலேசிய தமிழ் திறமையாக பேசுபவர்களுடைய பேச்சைக் கேட்பதற்க்கு,ஏற்பாட்டாளர்களுக்கு இத்தருனத்தில் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

சிங்கை திரு குணசேகரன் "புதிய ஊடகங்களில் தமிழ் பயன்பாடு" பற்றி விளக்கி மக்களின் பாராட்டைப் பெற்றார்.எப்படி மாநாட்டின் பாட்டுக்கு இசையமைத்தார் என்பதையும் ஐபோன்,ஐபேட் மூலமாக  எப்படி மக்களுக்கு கற்பிக்க முடியும் என்பதையும் இசையுடன் விளக்கிக் காணிபித்தார்.

மதியம் 1.30க்கு மதிய உணவின்போது வந்திருந்த ஆசிரியர்களிடமும் மணவர்களிடமும் இம்மாநாட்டை பற்றி கேட்டேன்,மிகவும் நன்றாக பயணுள்ளதாக இருக்கின்றதாகவும் அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மேலாகவே மலேசியா நண்பர்களின் உழைப்பு தெரிகின்றதாகவும்,மலேசிய தமிழ் மக்கள்  இலக்கியங்களை புரிந்து,நன்றாக தமிழ் பேசுகிறார்கள் என்றும் கூறினார்கள்.மதிய உணவு உண்ட பின் கடற்கரையோரம் நடக்கலாம் என்று சென்றேன்.காற்று இதமாக வீசி,கடற்கறையின் அழகில் மயங்க வைத்தது.அப்படியே சிறிது நேரம் கடற்கறையோரம் கண் அயர்ந்தேன்.

மதியம் 2.30க்கு 'கருத்தாடல் மன்றம்' நிகழ்ச்சியில் ஆர்வாளர்களும் ஆசிரியர்,மாணவர்களும் கேள்விகள் கேட்டனர்.
ஒருவர் ஏன் மாநாட்டில்,தமிழ் சிறுவர்களுக்கு நாம் என்ன செய்தோம் இதுவரை  என்று ஒருவரும் கூறவிலை? மற்றொருவர் இருநாட்டிலும் ஒவ்வொறு ஆண்டும் இப்படி பட்ட இலக்கிய மநாடுகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.சுமார் எட்டு பார்வையாளர்கள் மாநாட்டைப் பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

சுமார் 4 மணிக்கு மலேசியா பிரதமர் துணையமைச்சர் மாண்புமிகு டி.முருகையா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.அவரின் உரையில் அவர் தமிழர்களை பிரித்து பார்க்கவேண்டாம்,நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்.நாம் தமிழர்களுக்கு என்றும் கை கொடுத்து உதவ தயாராக இருக்க வேண்டும்,மனதில் நாம் எல்லோரும் வீரமானவர்கள்,நல்ல விடாமுயற்ச்சியுடன் நாம் எப்போழுதும் இருக்கவேண்டும் என்று கூறி,மாநாட்டு ஏற்பாட்டு குழுவினருகளுக்கு நன்றியும் பரிசும் வழங்கினார்.

சிங்கை மாணவர்களின் நடனம் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

மாநாட்டின் இறுதி கட்டமாக,,இம்மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

அடுத்து வரும் மாநாடுகளிள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டறைகள் இருக்ககூடும்,இலக்கிய மாநாடுகளில்,இலக்கிய போட்டிகள் நடைபெறும்.மாநாடுகள் குறைந்தது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படலாம்.இரு நாட்டிலும் ஒருவறை தேர்வு செய்து அவர் இலக்கியத்திற்க்கு எவ்வாறு உழைதார்,என்ன சாதித்தார் என்பதை ஏற்ப அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

விடைபெறும் நேரம் மலேசிய புது நண்பர்களிடம் மின்னஞ்சல்,முகநூல் விபரம் மாற்றிக்கொண்டேன்.ஒருவழியாக எதிர்பார்த்து காத்திருந்த இரு நாட்டு இலக்கிய மாநாடு நிறைவு பெற்றது.எதோ தெரியவில்லை ஒரு வித சோகம்! இலக்கிய தமிழ் ஆர்வாளர்களை விட்டு பிரியரோமே என்று  சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி,நல்ல செய்தியை என் வெளிநாட்டு தமிழ் உறவுகளுக்ககு சொல்லவேண்டும் தெரியப்படுத்த வேண்டும் என்று.

வாழ்க வாளர்க தமிழ்!
வணக்கம்.

"மொழியும் நாமும்" (படித்ததில் பிடித்தது)


இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.
இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?
            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?
            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 
சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 
இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்? 
            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 
அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 
அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 
            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா?  ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா?  ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 
சரி!  என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்!  ஆனால் எங்கு தேடுவது?
          ஏன் கவலைப்படுகிறீர்கள்?  முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை),  புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.  இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன.  பல இணையத் தளங்கள் இருக்கின்றன.  http://www.tamilkalanjiyam.comhttp://www.peyar.inhttp://wapedia.mobi/tahttp://thamizppeyarkal.blogspot.com,http://tamilsaral.com/news%3Fid%3D3857.dohttp://www.sillampum.com/http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம். 
குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?
            இல்லை.  குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம். 
வணிக நிறுவனங்களுக்குமா? 
ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா? 
வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?
            ஒன்றும் கவலையில்லை.  தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா?  ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா?  ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா?  ‘நாயர்’ கடைகள் இல்லையா? 
திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்?  இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?
          தமிழில் படம் எடுக்கிறார்கள்.  கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது.  படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள்.  ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும்.  நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை. 
தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?
            அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை.  எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள்.  அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள்.  ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது.  அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள்.  பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன? 
அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா?  தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா? 
அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும்.  நாம் தமிழர் அல்லவா!  எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்


நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நல்ல, நல்ல, நல்ல நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நல்ல, நல்ல, நல்ல நல்ல நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

சொல்லி அழைக்கும்போதே இன உணர்வு ஊட்டுங்கள்
சொல்லி அழைக்கும்போதே இன உணர்வு ஊட்டுங்கள்
பெயரை சொல்லி அழைக்கும்போதே இன உணர்வு ஊட்டுங்கள்
சொல்லி அழைக்கும்போதே இன உணர்வு ஊட்டுங்கள்
பெயரை சொல்லி அழைக்கும்போதே இன உணர்வு ஊட்டுங்கள்
சுவைத்தேன் தமிழ் இசை யாழினை மீட்டுங்கள்
சுவைத்தேன் தமிழ் இசை யாழினை மீட்டுங்கள்
சுவைத்தேன் தமிழ் இசை யாழினை மீட்டுங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நல்ல, நல்ல, நல்ல நல்ல நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் 

தாய்ப்பாலுடன் தமிழ் பாலையே புகட்டுங்கள்
தாய்ப்பாலுடன் தமிழ் பாலையே புகட்டுங்கள்
தமிழச்சி பெற்ற பிள்ளை இவனென காட்டுங்கள்
தமிழச்சி பெற்ற பிள்ளை இவனென காட்டுங்கள்
வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள்
வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள்
வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள்
வாயினிக்க தமிழ் பெயரிட்டே அழையுங்கள்
வரலாறு படைத்த தமிழ் கல்வியை அழையுங்கள்
வரலாறு படைத்த தமிழ் கல்வியை அழையுங்கள்
நல்ல, நல்ல, நல்ல நல்ல நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

பிறமொழி கலப்பட பேச்சை கைவிடுங்கள்
பிறமொழி கலப்பட பேச்சை கைவிடுங்கள்
பிழையின்றி தமிழையே பேசி பழகுங்கள்
பிழையின்றி தமிழையே பேசி பழகுங்கள்
அறநூல் திருக்குறளை படித்திட செய்யுங்கள்
அறநூல் திருக்குறளை படித்திட செய்யுங்கள்
அறநூல் திருக்குறளை படித்திட செய்யுங்கள்
அறிவுள்ள பிள்ளையாக்கி அவையின்முன் வையுங்கள்
அறிவுள்ள பிள்ளையாக்கி அவையின்முன் வையுங்கள்
அறிவுள்ள பிள்ளையாக்கி அவையின்முன் வையுங்கள்
நல்ல, நல்ல நல்ல, நல்ல நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

"மம்மி டேடி"என்று சொல்லி கொடுக்காதீர்
"மம்மி டேடி"என்று சொல்லி கொடுக்காதீர்
"மம்மி டேடி"என்று சொல்லி கொடுக்காதீர்
மழலை மொழி அமுதில் நஞ்சை கலக்காதிர்
மழலை மொழி அமுதில் நஞ்சை கலக்காதிர்
அ.....ம்.....மா............... அ.....ம்.....மா...............
அ.....ம்.....மா............... அ.....ம்.....மா...............
அ.....ம்.....மா............... அ.....ம்.....மா...............
அ.....ம்.....மா...............
அம்மா என்னும் உயர்ந்த சொல்லை மறக்காதீர்
அம்மா என்னும் உயர்ந்த சொல்லை மறக்காதீர்
அம்மா என்னும் உயர்ந்த சொல்லை மறக்காதீர்
அம்மா என்னும் உயர்ந்த சொல்லை மறக்காதீர்
அன்னை தமிழ்மொழிக்கே கேடு விளைக்காதீர்
அன்னை தமிழ்மொழிக்கே கேடு விளைக்காதீர்
அன்னை தமிழ்மொழிக்கே கேடு விளைக்காதீர்
நல்ல, நல்ல நல்ல, நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
நானொரு தமிழன் என்றே அடையாலம் காட்டுங்கள்
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

"A Love Story"


There was a Boy who love a Girl.But he never able to express his feelings.Boy was afraid of loosing her as a Friend.One day the girl went Abroad.
After 10 years they met in a restaurant.They were happy to see each other.The boy asked the girl "Are you married now?"
The girl replied "No",the Guy I wanted to marry never proposed me,"
The boy asked,"who is that?"
The girl answered "That guy is YOU"

கவிஞர் கண்ணதாசன்


கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

விருதுகள்
  • சாகித்ய அகாதமி விருது

மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல்அமெரிக்காவிலிருந்து அவரது உடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


உங்கள் சிந்தனைக்கு


மிக மிக நல்ல நாள்          இன்று
மிகப்பெரிய வெகுமதி       மன்னிப்பு
மிகவும் வேண்டாதது         வெறுப்பு
மிகவும் கொடிய நோய்      பேராசை
மிகவும் சுலபமானது          குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம்         பொறாமைபடுதல்
நம்பக்கூடாதது                வதந்திகளை
ஆபத்தை விளைவிப்பது      அதிகப்பேச்சு
செய்யக் கூடாதது            உபதேசம்
செய்யவேண்டியது            உதவி
விலக்க வேண்டியது          விவாதம்
உயர்வுக்கு வழி                 உழைப்பு
நழுவவிடக்கூடாது            வாய்ப்பு

FOR THE BEST LIFE


Talk                       Softly
Walk                      Humbly
Eat                        Sensibly
Breath                   Deeply
Sleep                    Sufficiently
Dress                    Smartly
Act                        Fearlessly
Work                     Patiently
Think                    Truthfully
Believe                 Correctly
Behave                Decently
Learn                   Practically
Plan                     Orderly
Earn                    Honestly
Save                    Regularly
Spend                 Intelligently

அன்னை தெரசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997)

கல்கத்தாவின் கடைவீதீகளில் நடந்துகொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.ஆதரவற்ற,சமூகம் வீசியெறிந்த,பாதுகாப்பற்ற ஏழைகள்,நோயாளிகள்,முதியோர்களுக்கு உதவும்படி பலரும் கையேந்தினர்.அவர்கள் பொருட்டு பாடுபடும் அந்தப் பெண்மணி,பணத் தேவைக்காகப் பல பேரிடம் கையேந்தியபோது எரிச்சலடைந்த ஒருவர் அந்தப் பெண்மணியின் கைகளில் காறி உமிழ்ந்தார்.காசு தராவிட்டாலும் பராவாயில்லை.காறி உமிழலாமா?கொஞ்சம் கூட முகத்தில் சலனமின்றி,கோபமின்றி "ஐயா எனக்கு தரவேண்டிய பங்கை தந்துவிட்டீர்கள்,நன்றி.ஆனால் இன்னும் அந்த ஏழைகளுக்குத் தர வேண்டியதைத் தரவில்லையே"என்று கண்களில் கருணை பொழியக் கேட்டார்.அந்த பெண்மணி தான் அன்னை தெரசா.தெய்விகமான அந்தப் பண்பு காறி உமிழ்ந்த வரைத் திகைக்க வைத்தது.அவர் நெஞ்சிலும் கருணை வெள்ளத்தை ஊற வைத்தது,அதுவல்லவா தொண்டு,தூய்மை.

அது அதுவாகவே இருக்கும்போது,நான் நானகவே இருக்கிறேன்.

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது.தத்தளித்தது.தண்ணீருக்குள் கைவிட்டுத் தேளைத் தூக்கினார் துறவி.தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள்.துடித்து.தேளைத்தவறி தண்ணிரில் விட்டார் துறவி.மறுபடியும் கருணையோடு தூக்கினார்.மறுமடியும் கொட்டியது.எத்தனை முறை முயன்றாலும் அதே கதை.கரையிலிருந்து ஒருவர் கேட்டார்."சுவாமி,தேள்தான் கொட்டுகிறதே.திரும்ப திரும்ப ஏன் காப்பாற்றுகிறீர்கள்,விட்டுவிடுவேண்டியதுதானே?துறவி சொன்னார்."கொட்டுவது தேளின் இயற்க்கை குணம்.காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம்.அதனுடைய இயற்கையை அது விடாதபோது என்னுடைய இயல்பை மட்டும் நான் ஏன் விட வேண்டும்?"