Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

பெற்றோர்களை கால் தொட்டு வணங்க வேண்டுமா?


இது 2011 என்ன பழைய பஞ்சாங்கத்தை பற்றி பேசுகிரீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.என் பெற்றோர்களுக்கு நான் செய்யும் ஒரு மரியாதை என்றி வைத்துக்கொள்ளுங்களேன்.

தாயெய்யும்,தந்தையரையும் குருவையும் தினசரி கடமையாக கால் தொட்டு வணங்க வேண்டும் என்பது நம் முன்னோர்கள் வகுத்திருந்த விதி.

தாய் தந்தையருக்கும் குருவுக்கும் ஓர் மலர்ந்த புன்னகை கூட வழங்காத இந்த கால தலைமுறையினர்க்கு இந்த விதி ஓர் "பழைய" ஏற்பாடு.

கருத்தை பார்ப்போம்.

தினமும் காலையில் பெரியவர்களின் கால் தொட்டு வணங்குவதால்,அவர்களுடை ஆசிர்வாதம் பெறலாம்,அவர்கள் நமக்கு செய்யும் சேவைகளை நினைத்துதான் நாம் கால் தொட்டு வணங்குகின்றோம்.பதிலாக அவர்களுடைய ஆசியெய்யும் பெறுகின்றோம்.

பெரியவர்களை முக்கியமாக பெற்றோர்களை பார்த்தால் "வணக்கம்" கூறுவது,எழுந்து நின்று மரியாதை தெரிவிப்பது,கால் தொட்டு வணங்குவதிலும்,சாஷ்டாங்க வணக்கம் செய்பவர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.

பல இனங்கள் போற்றும் ஓர் சிறந்த  உடற்பயிற்ச்சி  யோகாசனம். இந்த நவீன காலத்தில் கால் தொட்டு வணங்குதல்,சாஷ்டாங்க வந்தனம் என்பவை முக்கியமான யோகமுறைகள்.

பாதங்களுக்கு தனி சிறப்புகள் உண்டு.பத்து மாதம் நம்மை ஈன்றெடுத்த தாயையும்,நமக்கு அறிவூட்டி வளர்த்த தந்தையையும் நாம் கால் தொட்டு வணங்கினால்,குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்,பாசமும் நெருங்கிய உறவும் மேலும் வளருவதை நாம் பார்க்கலாம்.இது நம் பெற்றோர்களுக்கு நாம் செய்யும் ஒரு சேவை என்பது என் கருத்து.

No comments:

Post a Comment