படம்:பாபு பாடல்:வாலி பாடியவர்:டி.எம் சொளந்தரராஜன்இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருனையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருனையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருனையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே
பல நூல்படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே
தன் வியர்வையிலும் உழைப்பிப்னிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருனையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையிலே கண்டேனே

No comments:
Post a Comment