Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

தேமதுரமான மொழியாம் நம் இனிய தமிழ் மொழி

வற்றாமல் சுரக்கும் தேனருவியாய்

வரலாறை சுமந்து வரும் மலையருவியாய்

சிந்தனையில் வைத்தோர்க்கு சுவைத்திடும்

சீரிளமையோடு மனதில் சிரித்திடும்

தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்

சிலப்பதிகாரம் சொல்லும் நீதி

மன்னர் புகழ் பாடும் பரணி

இளையோர் காதல் சொல்லும் அகநானூறு

இறைவன் புகழ் பாடும் திருமறைகள்

வாழ்க்கை வழிகாட்டும் திருக்குறள்

வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்

சுதந்திரதாகமூட்டும் பாரதி பாடல்கள்

தமிழை உயிரில் கரையவைக்கும் பாரதிதாசன் கவிதைகள்

இனிக்க ஒலிக்கும் கண்ணதாசன் பாடல்கள்

இணையத்தில் மட்டுமன்றி இனி பாரெங்கும்

பரவும் இந்த அமுத மொழி

நன்றி:-
~ சதீஸ் குமார் ராஜமாணிக்கம் http://bit.ly/dyEHYW

No comments:

Post a Comment