Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"வீரவணக்கம்"


இன்றும் தமிழ்மொழி போராட்டத்தினூடே வாழ்ந்துவருகிறது. இன்றைய போராட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களின் சார்பாகவே நடைபெற்று வருகிறது். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற அடித்தட்டு மக்கள் அதிகம் உள்ள இயக்கங்களே இன்றைய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல், தம் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைத்தல், தம் உரையாடலில் தமிழ்சொற்களை அதிகம் பயன்படுத்துதல், தமிழின் மரபுகளை, கலைகளை மீட்டெடுத்தல் என தமிழ் காக்கும் நடவடிக்கைகள் உண்மைத்தமிழர்களிடம் வந்துசேர்ந்துள்ளது. இது மூன்றாம் மொழிப்போராகும். இந்தப் போர் நிச்சயம் வெல்லும்.

இது நாள்வரை நடைபெற்ற போராட்டங்களில் பங்குகொண்டு தம் இன்னுயிரை ஈந்த ஈகியரில் சிலர்....

நடராஜன் (25-01-1939), 
தாளமுத்து (11-03-1939),
 மயிலாடுதுறை சாரங்கபாணி (15-03-1965),.
சிவகங்கை இராசேந்திரன், 
கீழப்பழுஊர் சின்னசாமி,
 வீராலிமலை சண்முகம், 
கோடம்பாக்கம் சிவலிங்கம்,
 விருகம்பாக்கம் அரங்கநாதன், 
பீளமேடு தண்டபாணி,
சத்தியமங்கலம் முத்து, 
விழுப்புரம் ஆசி்ரியர் வீரப்பன், 
கீரணூர் முத்து,
 கோவை ஆரோக்கியசாமி, 
ஆலந்தூர் சின்னான்,
 சின்ன வடுகப்பட்டி கருப்பண்ணன்,
 உத்திரமேரூர் குப்புசாமி,
 உடையார் பாளையம் வேலாயுதம், 
நெல்லிக்குப்பம் மஜித்,
 நாகர்கோயில் கீருட்டிணன், 
மண்டகப்பட்டு தனஞ்செயன்
...............................
 என நீளும் பட்டியல்...

இவர்கள் அனைவருக்கும் எமது செம்மாந்த வீரவணக்கம்.


No comments:

Post a Comment