Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

அன்னை தெரசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997)

கல்கத்தாவின் கடைவீதீகளில் நடந்துகொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.ஆதரவற்ற,சமூகம் வீசியெறிந்த,பாதுகாப்பற்ற ஏழைகள்,நோயாளிகள்,முதியோர்களுக்கு உதவும்படி பலரும் கையேந்தினர்.அவர்கள் பொருட்டு பாடுபடும் அந்தப் பெண்மணி,பணத் தேவைக்காகப் பல பேரிடம் கையேந்தியபோது எரிச்சலடைந்த ஒருவர் அந்தப் பெண்மணியின் கைகளில் காறி உமிழ்ந்தார்.காசு தராவிட்டாலும் பராவாயில்லை.காறி உமிழலாமா?கொஞ்சம் கூட முகத்தில் சலனமின்றி,கோபமின்றி "ஐயா எனக்கு தரவேண்டிய பங்கை தந்துவிட்டீர்கள்,நன்றி.ஆனால் இன்னும் அந்த ஏழைகளுக்குத் தர வேண்டியதைத் தரவில்லையே"என்று கண்களில் கருணை பொழியக் கேட்டார்.அந்த பெண்மணி தான் அன்னை தெரசா.தெய்விகமான அந்தப் பண்பு காறி உமிழ்ந்த வரைத் திகைக்க வைத்தது.அவர் நெஞ்சிலும் கருணை வெள்ளத்தை ஊற வைத்தது,அதுவல்லவா தொண்டு,தூய்மை.

No comments:

Post a Comment