வேறொரு மனவெளி, சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்,தொகுப்பாசிரியர்:பாலு மணிமாறன்,என்ற நூலிருந்து நான் படித்த "முகமூடி"என்ற கதையின் விமர்சனத்தை,என் கருத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த சிறுகதையெய் எழுதியவர் குமாரி சூர்ய ரத்னா.இவர் பல சிறுகதைகள்,நாடகங்கள் எழுதி "Young Writers Fellowship"1998ல் விருதையும் பெற்றவர்.பெரும்பாலும் மனிதனின் பறுபக்கத்த்தை ஆராயக்கூடியதாக அமையும் கதைகளையே இவர் விரும்பி எழுதி வருகிறார்.இனி கதையெய் பார்ப்போம்.
சுபா ஒரு பதின்ம வயதின பெண்.அலுவலகத்தில் பணி புரிபவர்.தன் குடும்பம் ஒரு நல்ல குடும்பம்,தாய்,தந்தை நல்லவர்கள்,தனக்கு எந்த குறையும் வைக்க வில்லை என்று என்னி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துக்கொண்டிருந்தார்.தந்தை கேட்டதையெல்லாம் வாங்கி தருபவர்,வெளியூர் விடுமுறைகளுக்கு அழைத்த்து செல்பவர்.
அன்று தன் தோழி விக்னேஸ்வரிவயுடன் திறையரங்கிற்க்கு படம் பார்க்க சென்றிருந்தார்,அங்கு தான் கதையின் களைம்மேக்ஸ் வருகின்றது.
திரைப்பட வெளிச்சத்தில் எதார்த்தமாக அவள் திசை திரும்பியது,அதிர்ச்சி!!!.தன் தந்தை போல ஒருவரா,இருக்க முடியாது.தன் தந்தை இப்படி பட்டவர் இல்லை என்று சுபாவிற்க்கு தெரியும்.படம் எப்போழுது முடியும்,நல்ல அவரைப் பார்கவேண்டும் என்று காத்திருந்தார்.படம் முடிந்ததும் சுபாவால் தன் கண்களை நம்பமுடியவில்லை,தன் தந்தை நல்லவர்,ஒழுக்கமானவர் என்று நம்பும் அவரா இது?தன் தோழி "அது தள்ளிக்கொண்டடு போகிற கேஸாகதான் இருக்கும்,பார்த்தாலே தெரிகிறது,என்று கூறி கேலியாக சிறித்தாள்.உடன் சென்ற பெண் இருபத்தைந்து வயதைக் தான்டி இருக்க மாட்டாள்.அவள் இடுப்பைப் பற்றியவாறு அவர் திரையரங்கை விட்டு வெளியேரினார்.சுபா மனம் உடைந்து போனார்.இதை அம்மாவுடம் சொல்லலாமா வேண்டாமா என்று,குழம்பி போனார்.
மருநாள் தன் அம்மா ரீனாவிடம் சொல்லலாம் என்று என்னும்போது,தன் தாயின் கலகலப்பான முகம்,அந்த மகிழ்ச்சியெக் கெடுக்க வேண்டுமா,ஏன் பெரிதாக்கி அம்மாவைப் புண்படுத்த வேண்டுமா,இப்படி பல சிந்தனைகள்.தைரியத்தை வரவழித்து அன்று மாலை சொன்னார்.
அதற்க்கு அவள் தாயார்,ஒரு பெண் தோழியிடம் படம் பார்க போவது தவறில்லையே,என்று பொதுவாக கூறினாள். அப்பா அந்த பெண்ணின் இடுப்பை அனத்துக்கொண்டு போனது பற்றியும் சொன்னார்.தாயார் ரீனா இந்த விஷ்யம் தனக்கு முன்பிருந்தே தெரியும் என்றார்.இதுபற்றி அப்பாவிடம் எதுவும் கேட்ககூடாது என்று தன் மகளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். இன்னும் சிறிது காலத்தில் நீ கல்யாணம் செய்துகொள்வாய்,அதற்க்கு பிறகு உங்கே அப்பாவிற்கு நானும் எனக்கு உன் அப்பாவும்.நம் குடும்பத்தில் உன்னால் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று சொல்லி மகளிடம் சத்தியம் வாங்கிகொண்டார்.தன் மகளை மன நிம்மதிக்கு யோகா வகுப்புக்கு போகுமாறு சொல்லி அனுப்பினார்.
சுபா வீட்டைவிட்டு வேளியே சென்றவுடன் கையசைத்ததற்க்கு தன் தாயும் கையசைத்தால்.ரீனா தன் கைதொலைபேசியெயைத் எடுத்தாள்."சுரேஷா? ரீனா,என் புருஷனையும் அவருடைய செட்டாப்பையும் என் மகள் பார்த்துவிட்டாள்.ஒரு வழியாக சமாளிப்பாள் என்று நம்புகிறேன்....பிள்ளைகள் வளர்வதே தெரியமாட்டேன் என்கிறது...நாமும் மிகவும் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும்....
உங்களுக்கு மறுபடி போன் செய்கிறேன்,விரிவாக சொல்கிறேன்..."என்று சொல்லி இருமுனைகளிலும் முத்தங்கள் பரிமாறப்பட்டன.
(ஒரு இந்திய குடும்பத்தில் இப்படியும் நடக்குமா,குடும்பம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது,பொய்யான பெற்றோர்களின் உறவுகளால் பாவம் பிள்ளைகள்தான் துன்பப்படுவார்கள்.இதிலே தாயுக்கும் கல்லதொடர்பு இருகிறது "சே!!!",யாரேனும் ஒருவர் குடும்பத்தை பற்றி,பிள்ளையின் வருங்காலத்தைப்பற்றி நினைத்தார்களா? "முகமூடி"கதையாசிரியர்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,இப்படிபட்ட வெளிப்படையான கருத்தக்கள் கொண்ட கதைகளையே நான் விரும்பி படிக்க விரும்புகிறென்.இந்த கதையில் மகள் சுபாவிற்க்கு மனரீதியாக பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு இருக்கலாம்,அம்மாவின் உண்மையான முகம் தெரிய வந்தால்,கல்லத்தொடர்பு வைத்திருக்கும் பெற்றோர்கள்,இந்த கதையைய் படித்து திருந்துவார்களா,என்று பார்ப்போம்.கதை ஆசிரியர் குமாரி சூர்ய ரத்னா மேலும் பல இம்மாதிரியான சமூகத்தை சிந்திக்கவைக்கும் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன்.)

No comments:
Post a Comment