Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"மானாட மயிலாட"-குறுந்தட்டு "சுப்ரமண்யா", இசையமைத்து பாடியவர் சக்திதாசன் ,இயற்றியவர் டாக்டர் கிருத்தியா

மானாட மயிலாட கனநாதன் தான் ஆட மங்கை சிவகாமி ஆட அரோஹரா
மீனாளின் கண்ணாட கூத்தனும் தானாட மாயோனும் பிரம்மனும் ஆட அரோஹரா
இந்திரந்தானாட இமயோர்கள் வானாட எழும்முனிவர் அந்தரம் ஆட அரோஹரா
சுந்தரம் முருகனும் கனங்களும் தானாட இடும்பன் கடம்பன் ஆட அரோஹரா

இடும்பன் கடம்பன் வர எட்டுக்குடி வேலன் வர 
இடும்பன் கடம்பன் வர எட்டுக்குடி வேலன் வர 
இடும்பன் கடம்பன் வர எட்டுக்குடி வேலன் வர 
இடும்பன் கடம்பன் வர எட்டுக்குடி வேலன் வர 
வேல் வேல் வடி வேல்  
வேல் வேல் வடி வேல்
வேல் வேல் வடி வேல்  
வேல் வேல் வடி வேல்

இடும்பன் கடம்பன் ஆடிவர,எட்டுக்குடி வேலன் வர பத்துமலையின் உடம்பு குலுங்குது கடம்பவனத்தில் மரங்கள் உடைத்து காவடிகள் நூறு வடித்து தேவகனங்கள் தாவி குதிக்குது
இரும்பு ஆணி காலனைகள் இடுப்புமார்ப்பு நவமணிகள் இடும்பன் முழக்க காவடிகள் உருள்ளுது
கடம்பவனத்தில் மரங்கள் உடைத்து காவடிகள் நூறு வடித்து பூதகணங்கள் தாவி குதிக்குது

இடும்பன் கடம்பன் ஆடிவர எட்டுக்குடி வேலன் வர பத்துமலையின் உடம்பு குலுங்குது
கடம்பவனத்தில் மரங்கள் உடைத்து காவடிகள் நூறு வடித்து தேவகனங்கள் தாவி குதிக்குது
கண்டம் ஒட்ட தண்டம் ஏந்தும் தண்டபாணியோடு முண்டகட்டிபோல் உருண்ட இடும்பன் கடம்பன் பாரு 

கண்டம் ஒட்ட தண்டம் ஏந்தும் தண்டபாணியோடு முண்டகட்டிபோல் உருண்ட இடும்பன் கடம்பன் பாரு
இடும்பனின் விரல்களை பற்றியே கடகட எனப்படி தாண்டுவோம்,அந்த கடம்பன் தாவி கதையும் துனிந்து நீயும் கேளு அந்த கந்த வேலும் முண்டி காண அந்த வழியே ஓடு 
கடகடகடமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கடகடகடவனமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கண்டம் ஒட்ட தண்டம் ஏந்தும் தண்டபாணியோடு முண்டகட்டிபோல் உருண்ட இடும்பன் கடம்பன் பாரு 

பிரம்மகண்டம் ஒன்று கட்டி இரண்டு மலைகள் இருக்கக் கட்டி இடம்பியோடு அலகுத்தி இடும்பன் வந்தானே
கடம்பமாலை போட்டுக்கொண்டு கந்தன் மாயம் தோற்றம்கொண்டு இடும்பனுக்கு நண்பன் என்று கடம்பன் வந்தானே
நீலகிரியும் புஷ்பகிரியும் தாண்டியே அவன் நீண்ட பத்து மலையில் யேறும் வேலையே
நல்ல சப்பரங்கள் கட்டி இழுத்து ஏறுவோம் அந்த சுப்ரமணியசாமியோடு பேசுவோம்
கடகடகடவனமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கடகடகடமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கண்டம் ஒட்ட தண்டம் ஏந்தும் தண்டபாணியோடு முண்டகட்டிபோல் உருண்ட இடும்பன் கடம்பன் பாரு 

வேற்க வேற்க விருவிருக்க காவடிகள் படையெடுக்க இடும்பனுக்கும் கடம்பனுக்கும் 
பசியெடுத்ததே
பக்கம் வந்த பால்குடங்கள் முத்துக்குமரன் பேரேச்சொல்ல முட்டிக்கொண்டு வந்த பசியும் பறந்துபோனதே 
காலம் காக்குக் சேவல் கூட வருகுதே அதன் கொண்டை வளைந்த காவடிகள் போல் ஆடுதே
அட ஆட ஆட பத்துமலையும் குலுங்குதே அதில் பத்மநாபன் மருகன் மனம் மயங்குதே
கடகடகடஎன படி யேறுவோம் அந்த சுப்ரமணிசாமியோடு பேசுவோம்
கடகடகடவனமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கண்டம் ஒட்ட தண்டம் ஏந்தும் தண்டபாணியோடு முண்டகட்டிபோல் உருண்ட இடும்பன் கடம்பன் பாரு 
இடும்பனின் விரல்களை பற்றியே கடகட எனப்படி தாண்டுவோம்,அந்த கடம்பன் தாவி கதையும் இங்கே  துனிந்து நீயும் கேளு 
அந்த கந்த வேலும் முண்டி காண அந்த வழியே ஓடு
கடகடகடவனமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
கடகடகடவனமலை யேறுவோம் சிவசரவணகுருசண்முகனை காணுவோம்
இடும்பன் கடம்பன் ஆடி வர எட்டுக்குடி வேலன் வர பத்துமலையின் உடம்பு குலுங்குது
கடம்பவனத்தில் மரங்கள் உடைத்து காவடிகள் நூறு வடித்து தேவகனங்கள் தாவி குதிக்குது
இரும்பு ஆணி காலனைகள் இடுப்புமார்ப்பு நவமணிகள் இடும்பன் முழக்க காவடிகள் உருள்ளுது
கடம்பவனத்தில் மரங்கள் உடைத்து காவடிகள் நூறு வடித்து பூதகணங்கள் தாவி குதிக்குது

No comments:

Post a Comment