Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

உறவுகள் மேம்பட சில வாழ்க்கை குறிப்புகள்


குடும்பத்திலும் சரி,அலுவலகத்திலும் சரி,மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாகாமாலும்  இருக்க 9 குறிப்புகள்.

1)நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2)அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்.

3)எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY) விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).

4)சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் (TOLERANCE).

5)எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும்,அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

6)உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBLITY).

7)மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும். இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

8)புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச் சொற்க்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

9)பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

No comments:

Post a Comment