Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

மரணதண்டனை மனிதாபிமானத்துக்கு எதிரானது சரியா?


மரணதண்டனை மனிதாபிமானத்துக்கு எதிரானது என்று அதனை ஒழிக்கவேண்டும் என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சிங்கையில் நேற்று இரு இந்திய ஆடவருக்கு மரணதண்டனையிலிருந்து "விடுதலை" கிடைத்தது.அதற்க்கு பதிலாக இருவருக்கும் நேற்று 15 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிறம்படிகளையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
டேனியல் விஜய் கதிரேசன் மற்றும் கிறிஸ்டோபர் சாம்சன் அன்பழகன் என்ற அந்த இருவருக்கும் வயது 27.இவர்கள் நாகமுத்து பாலகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து  ஒரு லாரியை மடக்கி,பந்து மட்டையால் வான் சியோன் கெம் என்னும் லாரி ஓட்டினரை தாக்கிக்யதில் அவர் மரணமடைந்தார்.மரண தண்டனை மூவருக்கும் விதிக்கப்பட்டது.மேல் முறையீட்டில் டேனியலுக்கும் கிரிஷ்டோபருக்கும் மரண தண்டனை விலக்கப்பட்டது.நீதிமன்ற விசாரனையில் இருவருக்கும் கொள்ளை திட்டம் எதுவும் இல்லை,இந்த திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட அரசன் கிருஷ்ணசாமி கோவிந்த ராஜூவின் கைப்பாவையாகத்தான்,இவர்கள் செயல்பட்டார்கள் என்று இவர்களின் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
அரசனக்கு ஏற்கனவே 15 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.தீவிர குற்றத்தினால் இந்த இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அரசு வழக்கக்றிஞர்கள் வாதாடினர்.
டேனியலும் கிற்ஸ்டபோரும் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.
இன்று நாட்டில் ஆங்கில காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படும் பெரிய விவாதமே, கசாபிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றியதுதான். முதலில் மரணதண்டனை என்பதே சரியா அல்லது தப்பா என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது. மரணதண்டனை என்பது தண்டனையே அல்ல என்று உலகம் தழுவிய அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதித்து வருகிறார்கள். ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் எனப் படும் உலகப்பொது மன்னிப்பு சபை இந்த மரணதண்டனையை எதிர்த்து கடுமையாக பரப்புரை செய்து வருகிறது. உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.நா. சபையில் மரணதண்டனைக்கு எதிராக தீர்மானமே கொண்டுவரப்பட்டது
அரசாங்கம் மரணதண்டனை நிறைவேற்றுவது சரியா,சிந்திப்போம் நண்பர்களே

No comments:

Post a Comment