சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் கல்யாண முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் கல்யாண முருகா சுப்ரமண்யம்
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் கல்யாண முருகா சுப்ரமண்யம்
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
தத்தும் கடல் மட்டும் விட்டு,நீல வண்னம் வானம் தொட்டு
பக்தருக்கு உற்றதுணை செய்பவா...
தைமாசம் ஒரு பூசம் சன்னாசி உனைத்தேடி
மலை தேசம் மலையேறும் பண்டார பாட்டுப்பாடி
படி படியாய் ஏற துடிக்கிறோம்...முருகையா....
தண்ணீர்மலையில் முருகையா!
Ipoh நகரில் முருகையா!
Johor Bahru முருகையா!
Selangor நகரில் முருகையா!
Scottது ரோட்டில் முருகையா!
Seramban சீமை முருகையா!
Malacca வாழும் முருகையா!
Pahang நகர முருகையா!
Menetong கோயில் முருகையா!
Maran கோயில் முருகையா!
Jedahவில் வாழும் முருகையா!
Batu மலையில் முருகையா!
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
கழிந்து போனது மார்கழி மாதம்
கனிந்த பழமாம் தை உருவாகும்
தையில் வருவது உன் திரு பூசல்
பூசம் தருவது திருநீர் வாசம்
கந்தா உன்னிடம் கையை கட்டி
காயா வேகம் காப்புக்கட்டி
அல்லும் பகலும் விரதம் இட்டு
சொல்லும் சொல்லில் முருகப்பற்று
பற்றுதல் எல்லாம் பத்துமலைக்கு
போற்றுதல் எல்லாம் வையாபுரிக்கு
ஊரார் எல்லாம் ஒருநாள் கூடி
உச்சிக் காவடி பூசைகள் ஆடி
நாக்கில் அலகு நயமுடன் குத்தி
தாடை அலகு தவமுடன் குத்தி
தேகம் எங்கும் சப்பரைக்கொத்தி
குத்தி இழுப்பதன் உந்தன் சக்தி
கோர்ட்டு மலையின் கனேசன் அருளப்
பார்த்தாடியாம் பரிவுடன் பெற்று
அம்பாள் திருவடியாம் ஆசிகள் பெற்று
தெம்பாய் உன்னை நோக்கி நடக்க
அன்பாய் என்னைக் காப்பாய் குகனே.......
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
பூமலையின் மேலிருந்து பூதலத்தை காப்பவறே
பால்குடங்கள் பக்குவமாய் தாங்கவா
ஐயா உன் மெய்கான சீனத்தெரிவில் மாரியம்மன்
கால்தேடி மன்றாடி உத்தரவு வாங்கி வந்தோம்
உச்சி மலை மெச்சி ஏற்றமே!....முருகையா....
பழனிமலையில் முருகையா!
சுவாமிமலையில் முருகையா!
விறாளிமலையில் முருகையா!
குமரன்மலையில் முருகையா!
ஜோதிமலையில் முருகையா!
வள்ளிமலையில் முருகையா!
சுருளிமலையில் முருகையா!
பிண்டல்மலையில் முருகையா!
கொள்ளிமலையில் முருகையா!
செங்கோட்டுமலையில் முருகையா!
சென்னிமலையில் முருகையா!
மருதமலையில் முருகையா!
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
அண்ணம் தண்ணி ஏதும் இல்லே
எத்தும்மையில் பாதை இல்லே
உன்னை என்னி நடக்கையிலே
உள்ளங்காலில் ரேகை இல்லே
வேகம் போகும் வேகத்திலே
தோகே மயில் போல வந்து
அடிவாரத்தில் ஆனை முகமாம்
படியில் ஏற சீட்டு தருமாம்
பால்குடங்கள் மெட்டி ஒலிக்க
தக்கதிமி தாலம் அடிக்க
பண்டாரங்கள் பாட்டு படிக்க
பக்தியினாலே படிகள் துடிக்க
என்னைப்படி உன்னைப்படி
என்றும்படி ஏற்றம்படி
காலப்படி நேரப்படி
கந்த குருவின் காலைப்பிடி
ஞானம்படி நன்குபடி
என்றபடி ஏற்றும்படி
வேலன் அவன் என்னம்படி
ஏற்றும்பப்டி ஏனிப்படி
உச்சிப்படி காட்டுகின்றதே!!!!
பத்துமலே உச்சியிலே முத்தையனே உந்தன் சேலே
பொத்திவச்சே கண்களிளே கண்ணீர்மழே
கந்தா சரணம்,குமரா சரணம்,முருகா சரணம்
வேலா சரணம்,குகனே சரணம்,அழகா சரணம் முருகா!!!!
பத்துமலே உச்சியிலே முத்தையனே உந்தன் சேலே
பொத்திவச்சே கண்களிளே கண்ணீர்மழே
வெள்ளப்பணி குகையினிலே ஐயா உச்சன் தலையினிலே
பால் வழஞ்சி ஓடும் காட்சி என்ன சொல்ல
ஈராறு விழிக்கான இருநூற்றி எழுவத்ஹ்தி இரண்டு
படியேறி தல்லாடி இறைவா உந்தன் கோலம் கண்டு
உள்ளம் எல்லாம் உறுகி ஆடுதே! முருகையா....
Tampoi நகரில் முருகையா!
Taiping நகரில் முருகையா!
Cameron மலையில் முருகையா!
Sungei Patani முருகையா!
kadang கு சாலையில் முருகையா!
Bukit Cheena முருகையா!
kuala Lalumpuரில் முருகையா!
Sabah Sarawak முருகையா!
சிங்கை JURONG முருகையா!
சிங்கை SENKANG முருகையா!
TANK சாலையில் முருகையா!
BUKIT TIMAH முருகையா!
முத்துவடிவேலவரே Batu மலே ஆண்டவரே
சுந்தரமே சுப்பரமணிய வேலவா
பத்துமலை சுப்ரமன்யா!!!!!!!
படியேத்திவிட்ட தேவா!........
சுப்ரமண்யா!... உன் பாதங்கள்
ச ர ண மை யா ! ! ! ! ! ! !

No comments:
Post a Comment