சிங்கப்பூர் சங்கங்களான "திருவள்ளுவர் தமிழ்வளர்ச்சிக் கழகம்",தமிழ்வேல் நற்பணி மன்றம்","மக்கள் கவிஞர் மன்றம்","சிங்கப்பூர் தமிழர் சங்கம்","சைவ சித்தாந்த சங்கம்",மற்றும் "திருவள்ளுவர் பதிப்பகம்"(தமிழ் அமுதம் சஞ்சிகை) சேர்ந்து மலேசியா,"ஜோகூர் மாநிலத் தமிழர் சங்க"மும் சேர்ந்து நடத்திய தமிழ் இலக்கிய உறவு மாநாட்டு விழா 26/2/2011 மற்றும் 27/2/2011 தேதிகளில் லோட்டஸ் டெசாரு,கடற்கறை தங்குவிடுதி,கோத்தா திங்கி,ஜொகூரில் மிகவும் கோலகலமாக நடந்தது.
முதல் நாள்,மதியம் 3 மணிக்கு,மங்கள நாதஸ்வர இசையுடனும் பரதநாட்டியத்துடனும் ஆரம்பித்து, இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.சிங்கை பல்கலைக்கழகம்,பல துறை தொழில்நுட்பக்கல்லூரி,ஆசிரியர் பயிற்ச்சி நிலையம்,மற்றும் உயிர்நிலை பயிலும் மாணவர்களும் பெரிய அளவில் வந்திருப்பதை காண பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.நான் சிங்கை மூத்த ஆசிரியர்களையும்,முனைவர்களையும் சந்தித்து உரையாடி பல செய்திகளை கேட்டு அறிந்ததில் எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது.
முகநூலில் மட்டுமே இதுநாளில் நான் பார்த்து பழகிவந்த மலேசிய முகநூல் நண்பர்களை மாநாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி அளித்தது.மாநாட்டின் வாசலில் சங்க காலத்தை சித்திரிக்கும் வண்ணமிகு அழகு நிறைந்த கோலத்தை பார்த்தவுடன்,நாம் இப்போழுது சங்ககாலத்தில்தான் இருக்கின்றோமா என எண்ணவைத்தது.மாநாட்டுக்கென்று தயாரிக்கப்பட சிறப்பு பாடலை இசையமைத்தவர் சிங்கை திரு குணசேகரன்.மாநாட்டு பாட்டை எழுதியவர் மாநாட்டின் செயலாளர் இரா.தமிழ்மணி.பாடலைப் பாடியவர்கள் தமிழக பின்னணிப் பாடகி சுருதி,திரு மணிமாரன்,திரு பரசுராமன்,திரு குணசேகரன்.பாடலும் இசையும் மிகவும் அருமையாக அவ்வப்போது அங்கங்களுக்கிடையே ஒளித்து எல்லோருடைய கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக படைக்கப்பட்டன.
முதல் அங்கமாக "வழிப்பயணக் கற்பிதங்கள்",படைத்தவர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.அவர் மலேசியப் படைப்பிலக்கியம் பற்றி அவை கடந்து வந்த பாதைகள்,துறைசார்ந்த படைப்புகள்,இப்படைப்புகளின் பலம்/பலவீனம் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்துறைத்தார்.
"வழிப்பயணக் கற்பிதங்கள்" இரண்டாவதாக பேசியவர் முனைவர் இரா.சிவகுமரன்.அவர் சிங்கப்பூர் படைப்பிலக்கியம் பற்றி அவை கடந்து வந்த பாதைகள்,துறைசார்ந்த படைப்புகள்,இப்படைப்புகளின் பலம்/பலவீனம் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்துறைத்தார்.குட்டி சிங்கப்பூரில் இத்தனை இலக்கிய விஷயங்களா என்னவைக்கிறது!
அடுத்து,இருநாட்டு மூத்த எழுத்தாளர்களின் பட்டறிவு."இலக்கிய வேள்வியா? அல்லது இதய வேதனையா?".எல்லோருக்கும் மிகவும் பயனளித்தது.நல்ல பெரிய அனுபவமுள்ள பல உயர்தர பரிசுகளைப் பெற்ற சிங்கை மலேசிய படைப்பாளர்கள் தாங்கள் எவ்வாறு எழுத்து துறைக்கு வந்தார்கள் என்றும்,எப்படி தங்களுக்கு எழுத்தார்வம் வந்தது என்றும்,தங்கள் கடந்து வந்த அனுபவங்களை பற்றி இனிய தமிழில் நகைச்சுவையுடனும் நம்மை சிந்திக்கவைக்கும் படியாகவும், நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அப்பேச்சாளர்களுள் என்னைக் கவர்ந்தவர் சிங்கை திரு பொன் சுந்தரராசு என்பவர்.தமிழகத்திலிருந்து சிங்கைக்கு வந்து நல்ல பேரும் புகழும் வாங்கி சிங்கைக்கு பல நல்ல அறிய பல நூல்களையும் தமிழ் ஊடக துறையில் பணி புரிந்தும்,5 முறை நல்ல தமிழ் ஆசிரியர் விருதை வாங்கியிருக்கிறார்.தமிழுக்கும் தமிழ் எழுத்து துறைக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் நல்லதொரு சேவையை பார்த்து,அவரைப் போல் நாமும் வரமாட்டோமா என்று மனம் எண்ணுகிறது. மாநாட்டில் அடுத்தடுத்து வந்த அங்கங்களும் இரு நாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பலர் படைத்த படைப்புக்களை பல விஷ்யங்களை நமக்கு படம் பிடித்து காட்டின.
அடுத்து,"மின்னுலகில் தமிழ்ப் படைப்பிலக்கியம்".படைத்தவர்கள் திரு மா.நவின்,திரு கே.பாலமுருகன் மற்றும் திரு யுவராஜன்.இணையத்தில் வலைப்பதிவு தளங்கல் எவ்வாறு இயங்குகின்றன,எவ்வாறு இணையமூலம் இலக்கியங்களை மக்களிடம் சேர்க்கின்றன மற்றும் பல அரிய இணைய இலக்கிய செய்திகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்ச் சேவையார்ளைகளை சிறப்பித்து,ஒரு பாராட்டு விழா நடந்தேறியது.
மலேசியாவில் தமிழர்களுக்கு பல தொண்டுகள் புரிந்து மலேசிய தமிழர்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த "இலக்கிய குறிசில்","அகிலன்" 60 வருடங்களாக இலக்கியத்திற்க்காக சேவை செய்து,பட்டங்களும் பல விருதுகளும் பெற்ற மூத்த அறிஞர் திரு ராமையா அவர்களுக்கு நாதஸ்வர இசை முழங்க மலர்க் கிரீடம் சூட்டி,பொன்னாடை போர்த்தி,பூமாலை அணிவித்து கொளரவித்தார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது,அரங்கில் இருந்த எல்லோருக்கும்.
இரவு உணவை சுவைத்துக்கொண்டே இசையமைப்பாளர் திரு குணசேகரன்,மற்றும் மலேசிய இசைக் கலைஞ்சர்களின் இன்னிசையுடன் 1970தில் வந்த புகழ் பெற்ற பல பாடல்களைப் பாடி எல்லோருடைய மனதையும் கவர்ந்தனர். மாநாட்டின் முதல் நாள் இனிதே முடிந்தது என்று நினைத்தேன்..........ஆனால் எங்களுக்கு இரவு தங்கும் அறையிலோ ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிங்கை ஏற்பாட்டு குழுவினர்க்கும் ஒரு பெரிய கலந்துரையாடலே நடைபெற்றது. அனைவரும் அசதியில்லாமல் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டோம்.
"தந்தை பெரியார்","இந்திய இலங்கை தமிழின் நிலை" பற்றியும் அறிவைத் தூண்டும் விடுகதைகள் பற்றியும் உரையாடி மகிழ்ந்தோம்.இனி எப்போழுது இப்படி நாம் எல்லோரும் ஒன்றாக கூடபோகிறோம்? இப்படி உல்லாசமாக இரவு 11 மணிக்கு ஆரம்பித்த "நமக்குள்ளான" இன்ப அறிவூட்டும் கலந்துறையாடல் இரவு 12.30க்கு முடிந்தது.
இப்போழுது விடியற்காலை மணி 5,எனக்கு இன்னும் தூக்கம் வரவில்லை! காலை 7.30 மணிக்கு காலை சிற்றுண்டி முடிந்தபின் 2ஆம் நாள் மாநாடு துவங்கிவிடும்.நிறைய படங்கள் எடுத்துள்ளேன்,அவற்றையெல்லாம் திங்கட்கிழமை மேலிறக்கம் செய்கிறேன்.
ஒரு கனம் யோசித்து பார்க்கிறேன்,எவ்வளவு கடும் உழைப்பு போட்டிருக்க வேண்டும் இரு நாட்டு தமிழ் அமைப்புகளும்,அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.
வாழ்க வளர்க தமிழ்!
வணக்கம்.

No comments:
Post a Comment