தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
நல்லோரை வரவேற்க்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு
நல்லோரை வரவேற்க்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளிவீசும் கண்கள் உண்டு
இல்லை யென்றெண்ணாத உள்ளம் உண்டு
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
பாவங்கள் இல்லையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழென்று மலர்சூடுங்கள்
சமுதாயம் வாழ்வென்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான என்னங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்

No comments:
Post a Comment