Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"அன்பின் வடிவே அனுமந்தா" ( பாடியவர் ) சக்திதாசன் ( குறுந்தட்டு ) ஶ்ரீ ஆன்ஞநேயா பக்தி பாடல்கள்


அன்பின் வடிவே அனுமந்தா
அருளின் உருவே அனுமந்தா
அஞ்சனையின் மைந்தா அனுமந்தா
அற்புதவீரா அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

அச்சம் அளிப்பாய் அனுமந்தா
ஆற்றல் தருவாய் அனுமந்தா
ஆயுள் தருவாய் அனுமந்தா
ஆதவன் வாழ்த்தும் அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

அபயம் அளிப்பாய் அனுமந்தா
அபாயம் தவிர்ப்பாய் அனுமந்தா
உபயம் அளிப்பாய் அனுமந்தா
உபாயம் சொல்வாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

மந்திரவடிவே அனுமந்தா
மகிழ்ச்சி தருவாய் அனுமந்தா
சுந்தரவீரா அனுமந்தா
சுகத்தைதருவாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

வேதப்பொருளே அனுமந்தா
வித்தைகள் தருவாய் அனுமந்தா
நாதக்கனலே அனுமந்தா
நலங்கள் அருள்வாய் அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

சீதக்கலபா அனுமந்தா
செந்தூரநாதா அனுமந்தா
ஆதிச்சுடரே அனுமந்தா
அலங்காரனே அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

சொல்லின் செல்வா அனுமந்தா
சோகம் அழிப்பாய் அனுமந்தா
கல்விக்கடலே அனுமந்தா
காத்தருள்வாயே அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

பத்துக்கரத்துடன் அனுமந்தா
பாவம்போக்கும் அனுமந்தா
வித்தகன் நிதியே அனுமந்தா
வினைகள் தீர்க்கும் அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

தேரில் பருந்து அனுமந்தா
விஜயனை காத்தாய் அனுமந்தா
பீமனின் அண்ணணாய் அனுமந்தா
தேருரூவாகிய அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

கற்பகதருவே அனுமந்தா
காலனை கடந்த அனுமந்தா
அற்புத குருவே அனுமந்தா
ஆனந்த முகிலே அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

எங்கெங்கெல்லாம் அனுமந்தா
ராமாயணமோ அனுமந்தா
அங்கெங்கெல்லாம் அனுமந்தா
அமர்ந்து ரசிப்பாய் அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

ராமதூதனே அனுமந்தா
அகத்தியன் துதிக்கும் அனுமந்தா
பிரம்மச்சாரியே அனுமந்தா
பக்திக்கனியே அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

கனையாழியினை அனுமந்தா
காட்டி சீதையின் அனுமந்தா
கலக்கம் நீக்கி அனுமந்தா
களிப்புரச்செய்தாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

கொளுத்துயவாலுடன் அனுமந்தா
கோலகலமாய் அனுமந்தா
லங்கையெய் எரித்து அனுமந்தா
குதுகளித்தாயே அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

சீதையெய்க் கண்ட அனுமந்தா
செய்தியெய் சொல்லி அனுமந்தா
நாதன் ராமனை அனுமந்தா
மகிழசெய்தாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

சஞ்சீவிமலையெய் அனுமந்தா
எடுத்து வந்து அனுமந்தா
இலக்குவன் உயிறை அனுமந்தா
மீட்டுக்கொடுத்தாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

ஐந்துமுகத்துடன் அனுமந்தா
அதிசயமாகி அனுமந்தா
மயில்ராவணனனை அனுமந்தா
வென்று அழித்தாய் அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

அண்ணல் ராமனின் அனுமந்தா
பட்டாபிஷேகத்தில் அனுமந்தா
அரியனைத்தாங்கிய அனுமந்தா
ஆனந்தம் தந்தாய் அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

சங்கரன் போற்றும் ஆன்மபலம்தா
மோகனவடிவே அனுமந்தா
மனோபலம்தா அனுமந்தா

வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்
வெற்றி கொடுக்கும் நின் யோகம்
முக்தியளிக்கும் உன் பாதம்

புண்ணியம் தந்திடும் அனுமந்தா
புத்திபலம்தா அனுமந்தா
திருவடியழகா அனுமந்தா
தேகபலம் தா அனுமந்தா

சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்
சக்தியளிக்கும் நின்ரூபம்
சஞ்சலம் போக்கும் உன் நாமம்

No comments:

Post a Comment