உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் பெரியாரின் அழுத்தமான குணம்.எதையும் மிதைப்படுத்தாமல் கற்ப்பனை சேர்க்காமல் எது உண்மையோ அதை சொல்வதுதான் அவரின் தனிச்சிறப்பு.நம்முடையா சுயம் எல்லாம் அவரால்தான் விளங்கிற்று,ஆனால் அவரோ தன் சுயத்தை மறுத்துக்கொண்டது தான் அவரின் பெறுமையே! பணக்காராய் பிறந்தார்,ஏழை எளியவருக்காக பாடுபட்டார்,மேல் சாதி என்று சொல்லப்படுகிற சாதியிலே பிறந்தார்.ஒடுக்கப்பட்ட்ட மக்களுக்காக பாடுபட்டு இறுதிவரை போராடினார்.ஆணாக பிறந்தார்,பெண்களுக்காக போராடினார்,அவர் 'கண்ணட'ராக பிறந்தார் என்று இன்னும் சிலர் அவரை பிதற்றி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்,ஆனால் காலமெல்லாம் அவர் தமிழர்களுக்காக இறுதி மூச்சுவறை போராடியிருக்கிறார்.எனவே நமக்கெல்லாம் நம் சுயத்தை உணர்த்தியவர்,தன் சுயத்தை மறுத்து கொண்டவர்.
"தொண்டு செய்த பழுத்த பழம்,தூய தாடி மார்பில் விழும்,மண்டை சுறப்பை உலகை தொழும்,அவர் அன்பான மனக்குகையில் சிறுத்தை எழும்" என்று புரட்சிக் கவிஞர்,பாவேந்தர்,பாரதிதாசன் நமக்கெல்லாம் தந்தையான பெரியாரப்பற்றி இப்படி அழகான காவியம் வரைந்திருக்கிறார்
வேறு பெயர்(கள்): ராமசாமி, ஈ.வெ.ரா., பெரியார், (அ) தந்தை பெரியார் பிறப்பு: செப்டம்பர் 17 1879 பிறந்த இடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா இறப்பு: திசம்பர் 24 1973 (அகவை 94) இறந்த இடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா இயக்கம்: சுயமரியாதை இயக்கம், தமிழ் தேசியவாதம் முக்கிய அமைப்புகள்: இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் குறிப்பிடத்தக்க விருதுகள்: யுனஸ்கோ (1970) மதம்: இறை மறுப்பாளர்

No comments:
Post a Comment